இலம்பகம் 10 · சீவக சிந்தாமணி · திருத்தக்க தேவர்
மண்மகள் இலம்பகம்
சீவக சிந்தாமணி 10 · மண்மகள் இலம்பகம்
2102. குடம்புரை செருத்தற் குவளைமேய் கயவாய்க்குவிமுலைப் படர்மருப் பெருமைநடந்தவா யெல்லா நறுமலர் மரையினாகிலைச் சொரிந்தவந் தீம்பாறடஞ்சிறை யன்னங் குருகொடு நாரைப்பார்ப்பின மோம்புதண் மருதமடங்கல்போற் றிறலார் மாமணி கறங்கவளவயற் புள்ளெனக் கழிந்தார்.2103. புரிவளை யலறிப் பூசலிட் டீன்றபொழிகதிர் நிலத்தில் முழக்கிவரிவளை சூழும் வலம்புரி யினத்துட்சலஞ்சல மேய்வன நோக்கியரிதுண ரன்னம் பெடையெனத் தழுவியன்மையி னலமர லெய்தித்திரிதரு நோக்கந் தீதிலார் நோக்கிநெய்தலுங் கைவலத் தொழிந்தார்.2104. கோட்டிளங் கலையுங் கூடுமென் பிணையுங்கொழுங்கதிர் மணிவிளக் கெறிப்பச்சேட்டிளங் கொன்றைத் திருநிழற் றுஞ்சச்செம்பொறி வண்டவற் றயலேநாட்டிளம் படியார் நகைமுகம் பருகுநல்லவர் போன்மலர் பருகுமோட்டிள முல்லை மொய்ம்மலர்க் கானமுருகுவந் தெதிர்கொள நடந்தார்.2105. குழவிவெண் டிங்கட் கோட்டின்மேற் பாயக்குளிர்புனல் சடைவிரித் தேற்குமழலவிர் சூலத் தண்ணலே போலவருவிநீர் மருப்பினி னெறியக்கழைவளர் குன்றிற் களிறுநின் றாடுங்கடிநறுஞ் சந்தனச் சாரலிழைவளர் முலையார் சாயல்போற் றோகையிறைகொள்பூங் குறிஞ்சியு மிறந்தார்.2106. ஊன்றலைப் பொடித்தாங் கனையசெஞ் சூட்டினெளிமயிர் வாரண மொருங்கேகான்றபூங் கடம்பின் கவட்டிடை வளைவாய்ப்பருந்தொடு கவர்குரல் பயிற்றுமான்றவெம் பாலை யழன்மிதித் தன்னவருஞ்சுரஞ் சுடர்மறை பொழுதினூன்றினார் பாய்மா வொளிமதிக் கதிர்போற்சந்தன மொருங்குமெய் புதைத்தே.2107. நிலையிலா வுலகி னின்றவண் புகழைவேட்டவ னிதியமே போன்றுமிலைகுலாம் பைம்பூ ணிளமுலைத் தூதினின்கனித் தொண்டையந் துவர்வாய்க்கலைவலார் நெஞ்சிற் காமமே போன்றுங்கடவுளர் வெகுளியே போன்றுமுலைவிலார் நில்லா தொருபக லுள்ளேயுருப்பவிர் வெஞ்சுரங் கடந்தார்.2108. புதுக்கலம் போலும் பூங்கனி யாலும்பொன்னிணர்ப் பிண்டியும் பொருந்திமதுக்கலந் தூழ்த்துச் சிலம்பிவீழ் வனபோன்மலர்சொரி வகுளமு மயங்கிக்கதிர்த்ததண் பூணி கம்புடாழ் பீலிக்கனைகுர னாரைவண் டானமெதிர்த்ததண் புனல்சூ ழின்னதிக் கரைமேலிளையவ ரயாவுயிர்த் தெழுந்தார்.2109. அள்ளிலைப் பலவி னளிந்து வீழ் சுளையுங்கனிந்துவீழ் வாழையின் பழனும்புள்ளிவா ழலவன் பொறிவரிக் கமஞ்சூன்ஞெண்டினுக் குய்த்துநோய் தணிப்பான்பள்ளிவாய் நந்து மாமையும் பணித்துப்பன்மலர் வழிபடக் குறைக்கும்வெள்ளநீர்ப் படப்பை விதையம்வந் தடைந்தேவேந்தனுக் குணர்த்தமுன் விடுத்தார்.2110. வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற்பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென்றேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங்கிறைவனுந் தமர்களைப் பணிப்பநாட்டகத் தமிர்து நளிகட லமிர்துநல்வரை யமிர்தமு மல்லாக்காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக்கண்ணகன் புறவெதிர் கொண்டார்.2111. பொருமத யானைப் புணர்மருப் பேய்ப்பப்பொன்சுமந் தேந்திய முலையாரெரிமலர்ச் செவ்வாய் திறந்துதே னூறவேத்துவார் பூக்கடூய்த் தொழுவார்வருகுலைக் கமுகும் வாழையு நடுவார்வரையுமி ழாவிபோன் மாடத்தருநறும் புகையு மேந்துவா ரூர்தோறமரர்த முலகமொத் ததுவே.2112. பாடி னருவிப் பயங்கெழு மாமலைமாட நகரத்து வாயிலுங் கோயிலுமாடம் பலமு மரங்கமுஞ் சாலையுஞ்சேடனைக் காணிய சென்றுதொக் கதுவே.2113. பல்கதி ராரமும் பூணும் பருமித்துக்கொல்சின வெந்தொழிற் கோடேந் திளமுலைநல்லெழின் மங்கையர் நன்னுதற் சூட்டியவெல்கதிர்ப் பட்டம் விளங்கிற் றொருபால்.2114. சுண்ணமுஞ் சூட்டுஞ் சொரிந்து வார்குழற்கண்ணிம காரொடு காற்சிலம் பார்த்தெழவண்ணலைக் காணிய வார்த்திற் போதரும்வண்ண மகளிர் வனப்பிற் றொருபால்.2115. எதிர்நலப் பூங்கொடி யெள்ளிய சாயற்கதிர்நல மங்கையர் காறொடர்ந் தோடமுதிரா விளமுலை முத்தொடு பொங்கவதிரரிக் கிண்கிணி யார்க்கு மொருபால்.2116. கருங்க ணிளமுலை கச்சற வீக்கிமருங்கு றளர மழைமருண் மாடநெருங்க விறைகொண்ட நேரிழை யார்தம்பெருங்க ணலமரும் பெற்றித் தொருபால்.2117. மின்னு குழையினர் கோதையர் மின்னுயர்பொன்வரை மாடம் புதையப் பொறிமயிறுன்னிய கோதைக் குழாமெனத் தொக்கவர்மன்னிய கோல மலிந்த தொருபால்.2118. பாடன் மகளிரும் பல்கலை யேந்தல்குலாடன் மகளிரு மாவண வீதி தொறோட வுதிர்ந்த வணிகல முக்கவைநீடிருள் போழு நிலைமைத் தொருபால்.2119. கோதையுந் தாரும் பிணங்கக் கொடுங்குழைக்காதன் மகளிரு மைந்தருங் காணியவீதியு மேலும் மிடைந்து மிடைமலர்த்தாதடுத் தெங்குந் தவிசொத் ததுவே.2120. மானக் கவரி மணிவண் டகற்றவங்கானை யெருத்தத் தமா குமரனிற்சேனைக் கடலிடைச் செல்வனைக் கண்டுவந்தேனை யவரு மெடுத்துரைக் கின்றார்.2121. தேமல ரங்கட் டிருவே புகுதகமாமலர்க் கோதை மணாளன் புகுதககாமன் புகுதக காளை புகுதகநாம வெழில்விஞ்சை நம்பி புகுதக.2122. மின்றோய் வரைகொன்ற வேலோன் புகுதகவின்றேன் கமழ்தா ரியக்கன் புகுதகவென்றோன் புகுதக வீரன் புகுதகவென்றே நகர மெதிர்கொண் டதவே.2123. இடிநறுஞ் சுண்ணஞ் சிதறியெச் சாருங்கடிகமழ் மாலையுங் கண்ணியுஞ் சிந்தித்துடியடு நுண்ணிடைத் தொண்டையஞ் செவ்வாய்வடியடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார்.2124. சுரும்பிமிர் மாலை தொழுவனர் நீட்டியிரும்பிடி நின்னடை கற்ற வெமக்குவிரும்பினை யாய்விடின் மெல்ல நடமோகருங்கணிற் காமனைக் காணமற் றென்பார்.2125. மடநடை பெண்மை வனப்பென்ப தோராய்கடுநடை கற்றாய் கணவ னிழப்பாய்பிடியலை பாவி யெனப்பூண் பிறழ்ந்துபுடைமுலை விம்மப் புலந்தனர் நிற்பார்.2126. மயிர்வாய்ச் சிறுகட் பெருஞ்செவி மாத்தாட்செயிர்தீர் திரள்கைச் சிறுபிடி கேள்வனயிரா வணத்தொடு சூளுறு மையனுயிர்கா வலற்கொண் டுதவநில் வென்பார்.2127. கருனைக் கவளந் தருதுங் கமழ்தாரருமை யழகிற் கரசனை நாளைத்திருமலி வீதியெஞ் சேரிக் கொணர்மோவெரிமணி மாலை யிளம்பிடி யென்பார்.2128. என்னோர் மருங்கினு மேத்தி யெரிமணிப்பொன்னார் கலையினர் பொற்பூஞ் சிலம்பினர்மின்னார் குழையினர் கோதையர் வீதியுண்மன்ன குமரனை வாழ்த்தி மகிழ்ந்தார்.2129. விளங்குபாற் கடலிற் பொங்கிவெண்டிரை யெழுவ வேபோற்றுளங்கொளி மாடத் துச்சித்துகிற்கொடி நுடங்கும் வீதியுளங்கழித் துருவப் பைந்தார்மன்னவன் கோயில் சேர்ந்தானிளங்கதிர்ப் பருதி பௌவத்திறுவரை யிருந்த தொத்தான்.2130. இழையொளி பரந்த கோயிலினமலர்க் குவளைப் பொற்பூவிழைதகு கமல வட்டத்திடைவிராய்ப் பூத்த வேபோற்குழையொளி முகமுங் கோலக்கொழுங்கயற் கண்ணுந் தோன்றமழைமின்னுக் குழாத்தின் மாலைமங்கையர் மயங்கி நின்றார்.2131. எரிக்குழாஞ் சுடரும் வையேலேந்தலைக் கண்டு கோயிற்றிருக்குழா மனைய பட்டத்தேவியர் மகிழ்ந்து செய்யவரிக்குழா நெடுங்க ணாரக்கொப்புளித் துமிழ வம்பூவிரைக்குழா மாலைத் தேனும்வண்டுமுண் டொழுக நின்றார்.2132. அலங்கறா தவிழ்ந்து சோரவல்குற்பொற் றோரை மின்னச்சிலம்பின்மேற் பஞ்சி யார்ந்தசீறடி வலத்த தூன்றிநலந்துறை போய நங்கைதோழியைப் புல்லி நின்றாளிலங்கொளி மணித்தொத் தீன்றவேந்துபொற் கொடியோ டொப்பாள்.2133. தாமரைப் போதிற் பூத்ததண்ணறுங் குவளைப் பூப்போற்காமரு முகத்திற் பூத்தகருமழைத் தடங்கண் டம்மாற்றேமலர் மார்பி னானைநோக்கினாள் செல்வன் மற்றப்பூமலர்க் கோதை நெஞ்சமூழ்கிப்புக் கொளித்திட் டானே.2134. விண்ணாறு செல்வார் மனம்பேதுறப் போந்து வீங்கிப்பண்ணாறு சொல்லாண் முலைபாரித்த வென்று நோக்கக்கண்ணாறு சென்ற களியைங்கணைக் காம னன்னபுண்ணாறு வேலான் மனமூழ்கினள் பொன்ன னாளே.2135. மைதோய் வரையி னிழியும்புலி போல மைந்தன்பெய்தாம மாலைப் பிடியின்னிழிந் தேகி மன்னர்கொய்தாம மாலைக் கொழும்பொன்முடி தேய்த்தி லங்குஞ்செய்பூங் கழலைக் தொழுதான்சென்னி சோத்தி னானே.2136. பொன்னாங் குவட்டிற் பொலிவெய்தித் திரண்ட திண்டோன்மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லித்தன்னன்பு கூரத் தடந்தாமரைச் செங்கண் முத்தமின்னும் மணிப்பூண் விரைமார்ப நனைப்ப நின்றான்.2137. ஆனாது வேந்தன் கலுழ்ந்தானெனக் கோயி லெல்லாந்தானாது மின்றி மயங்கித்தடங் கண்பெய்ம் மாரிதேனார் மலாபுர்த் தொழுகச்சிலம் பிற்சி லம்புங்கானார் மயிலின் கணம்போற்கலுழ் வுற்ற தன்றே.2138. பகைநரம் பிசையுங் கேளாப் பைங்கதிர்ப் பசும்பொற்கோயில்வகைநலம் வாடி யெங்கு மழுகுரன் மயங்கி முந்நீரகமடை திறந்த தேபோ லலறக்கோக் கிளைய நங்கைமிகைநலத் தேவி தானே விலாவணை நீக்கி னாளே.2139. பல்கதிர் மணியும் பொன்னும் பவழமுங் குயிற்றிச் செய்தசெல்வப்பொற் கிடுகு சூழ்ந்த சித்திர கூட மெங்குமல்குபூந் தாமந் தாழ்ந்து மணிபுகை கமழ வேந்தன்வெல்புகழ் பரவ மாதோ விதியுள யெய்தி னானே.2140. எரிமணி யடைப்பை செம்பொற்படியக மிலங்கு பொன்வாள்கருமணி முகடு வேய்ந்தகஞ்சனை கவரி கொண்டவருமுலை மகளிர் வைத்துவான்றவி சடுத்து நீங்கப்பெருமக னெண்ணங் கொள்வானமைச்சரோ டேறி னானே.2141. உலந்தநா ளவர்க்குத் தோன்றாதொளிக்குமீன் குளிக்குங் கற்பிற்புலந்தவே னெடுங்கட் செவ்வாய்ப்புதவிநாட் பயந்த நம்பிசிலம்புநீர்க் கடலந் தானைச்சீதத்தற் கரசு நாட்டிக்குலந்தரு கொற்ற வேலான்கொடிநகர் காக்க வென்றான்.2142. மாற்றவ னொற்ற ரொற்றாவகையினின் மறைய நம்பிக்காற்றின் தோழர்க் கெல்லாமணிகல மடிசி லாடைவேற்றுமை யின்றி வேண்டுட்டமைத்தன னருளி யிப்பாலேற்றுரி முரச நாணவெறிதிரை முழக்கிற் சொன்னான்.2143. கட்டியங் கார னம்மைக்காண்பதே கரும மாகவொட்டித் தான் விடுத்த வோலையுளபொரு ளுரைமி னென்னத்தொட்டுமேற் பொறியை நீக்கிமன்னனைத் தொழுது தோன்றவிட்டலர் நாகப் பைந்தார்விரிசிகன் கூறு மன்றே.2144. விதையத்தார் வேந்தன் காண்ககட்டியங் கார னோலைபுதையவிப் பொழிலைப் போர்த்தோர்பொய்ப்பழி பரந்த தென்மேற்கதையெனக் கருதல் செய்யான்மெய்யெனத் தானுங் கொண்டான்சிதையவென் னெஞ்சம் போழ்ந்துதெளிப்பினுந் தெளிநர் யாரே.2145. படுமணிப் பைம்பொற் சூழிப் பகட்டின மிரியப் பாய்ந்துகொடிநெடுந் தோக ணூறிக் கொய்யுளை மாக்கள் குத்தியிடுகொடி யணிந்த மார்ப ரிருவிசும் பேறச் சீறியடுகளிற் றசனி வேக மலமர வதனை நோனான்.2146. நூற்றுவர் பாகர் தம்மைப்பிளந்துயி ருண்ட தென்னுமாற்றத்தைக் கேட்டுச் சென்றுமதக்களி றடக்கி மேற்கொண்டாற்றலங் கந்து சோத்தியாப்புற வீக்கும் போழ்திற்கூற்றென முழங்கி வீழ்த்துக்கொல்லக்கோ லிளகிற் றன்றே.2147. தனக்கியா னுயிரு மீவேன்றான்வரப் பழியு நீங்குமெனக்கினி யிறைவன் றானேயிருநிலக் கிழமை வேண்டிநினைத்துத்தா னெடிதல் செல்லாதென்சொலே தெளிந்து நொய்தாச்சினக்களி யானை மன்னன்வருகெனச் செப்பி னானே.2148. ஓலையுட் பொருளைக் கேட்டேயொள்ளெயி றிலங்க நக்குக்காலனை யளியன் றானேகையினால் விளிக்கு மென்னாநூல்வலீ ரிவனைக் கொல்லுநுண்மதிச் சூழ்ச்சி யீதேபோல்வதொன் றில்லை யென்றான்புனைமணிப் பொன்செய் பூணான்.2149. கள்ளத்தா னம்மைக் கொல்லக்கருதினா னாமுந் தன்னைக்கள்ளத்தா லுயிரை யுண்ணக்கருதினே மிதனை யாருமுள்ளத்தா லுமிழ வேண்டாவுறுபடை வந்து கூடவள்ளுவார் முரச மூதூரறைகென வருளி னானே.2150. கட்டியங் கார னோடுகாவல னொருவ னானான்விட்டுநீர் நெல்லும் பொன்னும்வழங்குமின் விளைவ கூறினொட்டல னிறைவன் சொன்னீர்நாநும வல்ல வென்னக்கொட்டினான் றடங்கண் வள்வார்க்குளிறிடி முரச மன்றே.2151. விண்டவ ருடலங் கீறிச்சுளித்துநின் றழலும் வேழமொண்கொடி யுருவத் திண்டேரொளிமயிர்ப் புரவி பண்ணிவண்கழ லணிந்து மள்ளர்வாள்வலம் பிடித்து நாளைத்தெண்டிரைப் பரப்பு நாணத்திருநகர்த் தொகுக வென்றான்.2152. ஏற்றுரி போர்த்த வள்வாரிடிமுர சறைந்த பின்னாட்காற்றெறி கடலிற் சங்குமுழவமு முரசு மார்ப்பக்கூற்றுடன் றனைய தானைகொழுநில நெளிய வீண்டிப்பாற்கடற் பரப்பின் வெள்வாட்சுடரொளி பரந்த வன்றே.2153. புதையிரு ளிரியப் பொங்கிக்குங்குமக் கதிர்க ளோக்கியுதையத்தி னெற்றி சோந்தவொண்சுடர்ப் பருதி போலச்சுதையொளி மாடத் துச்சிவெண்குடை நீழற் றோன்றிவிதையத்தார் வென்றி வேந்தன்விழுப்படை காணு மன்றே.2154. அரும்பனைத் தடக்கை யபரகாத் திரம்வாய்வாலெயி றைந்தினுங் கொல்வகருங்கடற் சங்குங் கறந்தவான் பாலுங்கனற்றிய காலுகி ருடையபெரும்புலி முழக்கின் மாறெதிர் முழங்கிப்பெருவரை கீண்டிடுந் திறலதிருந்தியே ழுறுப்புந் திண்ணிலந் தோய்வதீயுமிழ் தறுகணிற் சிறந்த.2155. கவிழ்மணிப் புடைய கண்ணிழ னாறிற்கனன்றுதந் நிழலொடு மலைவவவிழ்புயன் மேக மனையமம் மதத்தவறுபதிற் றறுபதா நாகம்புகழ்பருந் தார்ப்பப் பூமதம் பொழிவானின்றன விராயிரங் கவுள்வண்டிகழ்மதஞ் செறித்த விராயிரத் தைஞ்ஞாறிளையவு மத்துணைக் களிறே.2156. குந்தமே யயில்வாள் குனிசிலை மூன்றுங்குறைவிலார் கூற்றொடும் பொருவாரந்தர மாறா யானைகொண் டேறப்பறக்கெனிற் பறந்திடுந் திறலார்முந்தமர் தம்முண் முழுமெயு மிரும்புமேய்ந்திட வெஞ்சமம் விளைத்தார்கொந்தழ லஞ்சாக் குஞ்சர மிவர்ந்தார்கோடியே விருத்தியா வுடையார்.2157. குங்கும நறுநீர் பந்திநின் றாடுங்குதிரையா றாயிரத் திரட்டிபொங்குவெண் மயிர்சூழ் பொற்படை பொலிந்தவறுபதி னாயிரம் புரவிவெங்கணை தவிர்ப்ப வெள்ளிவெண் படையவாய்விடி னிலவரை நில்லாப்பைங்கதிர்க் கொட்டைக் கவரிசூழ்ந் தணிந்தபகரினத் தொகையன பாய்மா.2158. வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப் பூம்போன்மிடைந்தொளிர் குந்தமும் வாளுந்தோநிலை யரவின் றோற்றமே போலுஞ்சிலைகளும் பிறகளுந் துறைபோயூனமொன் றில்லா ருயர்குடிப் பிறந்தாராயிர மடுகளங் கண்டார்பானிலாப் பூணார் படைத்தொழிற் கலிமாப்பண்ணுறுத் தேறினா ரவரே.2159. தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசான்மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்தபறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற்குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய.2160. பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்தவீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்தபாரிற் றோசெலிற் பழிபெரி துடைத்தென நாணிச்சோரும் வார்புய றுளங்கவிண் புகுவன துரகம்.2161. பீலி மாமயி லெருத்தெனப் பெருவனப் புடையமாலை மாரட்டத் தகத்தன வளரிளங் கிளியேபோலு மேனிய பொருகடற் கலத்தின்வந் திழிந்தகோல நீர்ப்பவ ளக்குளம் புடையன குதிரை.2162. இன்ன பொங்குளைப் புரவிபண் ணுறுத்தன வியறோபொன்னும் வெள்ளியு மணியினும் பொலிந்து வெண் மதியத்தன்னை யூர்கொண்ட தகையன தொகைசொலி னறுநூறென்னு மீறுடை யிருபதி னாயிர மிறையே.2163. நொச்சி மாமலர் நிறத்தன நொடிவரு முந்நீருச்சி மாக்கதிர் போற்சுடு மொளிதிக ழயில்வாளெச்சத் தல்லவு மெறிபடை பயின்றுதம் மொன்னார்நிச்சங் கூற்றினுக் கிடுபவர் தேர்மிசை யவரே.2164. எயிற்றுப்படை யாண்மையினி னிடிக்கும்புலி யொப்பார்பயிற்றியவில் வாள்பணிக்கும் வேலோடுடன் வல்லார்துயிற்றியபல் கேள்வியினர் தூற்றிக்கொளப் பட்டாரயிற்றுப்படை யார்கண்மத யானைகத னறுப்பார்.2165. காலனொடு சூழ்ந்தகடு நோய்களையு மொப்பாராலுங்கட றூர்த்தன்மலை யகழ்தலிவை வல்லார்ஞாலமறி யாண்டொழிலர் நான்கிலக்க முள்ளார்மேலுநும ராலுரிமை யுட்சிறப்புப் பெற்றார்.2166. சிங்கத்துரி போர்த்தசெழுங் கேடகமும் வாளும்பொங்குமயில் வேலும்பொரு வில்லுமுடன் பரப்பிமங்குலிடை மின்னுமதி யுஞ்சுடரும் போலவெங்கட்டொழிற் கூற்றுமரண் சேரவிரிந் தன்றே.2167. செம்பொ னீண்முடித் தேர்மன்னர் மன்னற்குப்பைம்பொ னாழிதொட் டான்படை காட்டினானம்பொ னொண்கழ லானயி ராவணம்வெம்ப வேறினன் வெல்கென வாழ்த்தினார்.2168. சிறுவெண் சங்கு முரன்றன திண்முரசறையு மாக்கடல் காரென வார்த்தனநெறியி னல்கின புள்ளு நிமித்தமுமிறைவன் கண்வல னாடிற் றியைந்தரோ.2169. மல்லல் யானைக் கறங்கு மணியொலியல்ல தைங்கதி மான்கொழுந் தாரொலிகல்லெ னார்ப்பொலி மிக்கொளிர் வாண்மினிற்செல்லு மாக்கடல் போன்றது சேனையே.2170. மாலை மாமதி வெண்குடை மல்கியகோவக் குஞ்சி நிழற்குளிர் பிச்சமுஞ்சோலை யாய்ச்சொரி மும்மதத் தானிலம்பாலை போய்மரு தம்பயந் திட்டதே.2171. மன்றன் மாமயி லார்த்தெழ மானினங்கன்றி னோடு கலங்கின காற்பெயவென்றி வேற்படை யஞ்சி வனத்தொடுகுன்றெ லாங்குடி போவன போன்றவே.2172. படுகண் முழவி னிமிழருவி வரையுங் காடும் பலபோகியிடுமண் முழவி னிசையோவாவேமாங் கதநாட் டெய்தியபினெடுவெண் ணிலவி னெற்றிதோய் நிழலார் செம்பொற் புரிசையேகடிமண் காவல் கருதினான் கோயி லாகக் கருதினான்.2173. போக மகளிர் வலக்கண்கடுடித்த பொல்லாக் கனாக்கண்டாராக மன்னற் கொளிமழுங்கிற்றஞ்சத் தக்க குரலினாற்கூகை கோயிற் பகற்குழறக்கொற்ற முரசம் பாடவிந்துமாக நெய்த்தோர் சொரிந்தெங்குமண்ணும் விண்ணு மதிர்ந்தவே.2174. கூற்றம் வந்து புறத்திறுத்ததறியான் கொழும்பொ னுலகாள்வான்வீற்றிங் கிருந்தே னெனமகிழ்ந்துவென்றி வேழ மிருநூறுங்காற்றிற் பரிக்குந் தோநூறுங்கடுங்கா லிவுளி யாயிரமும்போற்றி விடுத்தான் புனைசெம்பொற்படையே யணிந்து புனைபூணான்.2175. மன்ன னாங்கோர் மதவேழம்வாரி மணாள னென்பதூஉமின்னங் கொடித்தோ விசயமும்புரவி பவன வேகமும்பொன்னிற புனைந்து தான்போக்கநிகழ்வ தோரான் மகிழ்வெய்திமுன்யான் விட்ட வினக்களிற்றினிரட்டி விடுத்தா னெனப்புகழ்ந்தான்.2176. வீங்குநீர் விதையத் தார்கோன்கட்டியங் காரன் றன்னோடாங்கவ னொருவ னாகியன்பெனு மயில்கொள் வாளால்வாங்கிக்கொண் டுயிரை யுண்பான்வஞ்சத்தாற் சூழ்ந்த வண்ணமோங்குநீ ரோத வேலிக்குணரயா முரைத்து மன்றே.2177. பெருமகன் காதற் பாவைப் பித்திகைப் பிணையன் மாலையொருமக ணோக்கி னாரை யுயிரோடும் போக டாததிருமக ளவட்குப் பாலா னருந்திரி பன்றி யெய்தவருமக னாகு மென்றாங் கணிமுர சறைவித் தானே.2178. ஆய்மதக் களிறு திண்டே ரணிமணிப் புரவி யம்பொற்காய்கதிர்ச் சிவிகை செற்றிக் கலந்த வைநுரைக ளாகத்தோய்மழை யுலக வெள்ளந்தொன்னகர்த் தொக்க தேபோலாய்முடி யரச வெள்ள மணிநக ரீண்டிற் றன்றே.2179. நல்லவள் வனப்பு வாங்கநகைமணி மாலை மார்பர்வில்லன்றே யுவனிப் பாரும்வெங்கணை திருத்து வாரும்சொல்லுமி னெமக்கு மாங்கோர்சிலைதொட நாளென் பாரும்பல்சரம் வழங்கு வாரும்பரிவுகொள் பவரு மானார்.2180. பிறையெயிற் றெரிகட் பேழ்வாய்ப்பெருமயிர்ப் பைம்பொற் பன்றியறையெனத் திரியு மாய்பொற்பூமியி னிறைந்து மன்னருறுகணை யொன்றும் வில்லுமுடன்பிடித் துருவ நேமிப்பொறிதிரி வதனை நோக்கிப்பூமுடி துளக்கி நின்றார்.2181. ஏந்தெழி லாகஞ் சாந்தி னிடுகொடி யெழுதிக் காதிற்காய்ந்தெரி செம்போற் றோடுங் கனமணிக் குழையு மின்னவேந்தருள் வினிதை வேந்தன் வெஞ்சிலை தளர வாங்கியாய்ந்தபொற் பன்றி நெற்றி யருந்துக ளார்ப்ப வெய்தான்.2182. குடர்தொடர் குருதிக் கோட்டுக்குஞ்சர நகரத் தார்கோன்சுடர்நுதற் பட்ட மின்னச்சுரும்பிமிர் கண்ணி சிந்தவடர்கதிர்ப் பைம்பொற் பூணுமாரமு மகலத் தொல்கப்படர்சிலை குழைய வாங்கிப்பன்றியைப் பதைப்ப வெய்தான்.2183. வார்மதுத் துளிக்கு மாலைமணிமுடித் தொடுத்து நாலக்கார்மதங் கடந்த வண்கைக்காம்பிலிக் காவன் மன்னனோமதக் கேழ லெய்வானேறலும் பொறியி னேறுண்டார்மதக் களிற்று வேந்தர்க்கருநகை யாக வீழ்ந்தான்.2184. முலைவட்டப் பூணு முத்து முள்கலிற் கிழிந்து பொல்லாவிலைவட்டத் தாம மார்பிற் கோசலத் திறைவ னெய்தகுலைவட்டக் கருதி யம்பு வானின்மேற் பூச லுய்ப்பான்சிலைவட்ட நீங்கி விண்மேற் செவ்வனே யெழுந்த தன்றே.2185. ஊடிய மடந்தை போலவுறுசிலை வாங்க வாராதாடெழு வனைய திண்டோளவந்திய னதனை நோனானாடெழுந் தார்ப்ப மற்றந்நன்சிலை முறித்திட் டம்பைவாடினன் பிடித்து நின்றான்மண்மகன் போல நின்றான்.2186. பில்கித்தே னொழுகுங் கோதைப்பிறர்மனை யாள்கட் சென்றவுள்ளத்தை யுணர்வின் மிக்கானொழித்திடப் பெயர்ந்த தேபோன்மல்லனீர் மகத ராசன்றுரந்தகோன் மருள வோடிப்புல்லியப் பொறியை மோந்துபுறக்கொடுத் திட்ட தன்றே.2187. தென்வரை பொதியி லாரமகிலொடு தேய்த்த தேய்வைமன்வரை யகலத் தப்பிமணிவடந் திருவில் வீசமின்னென் விட்ட கோலைவிழுங்கக்கண் டழுங்கி வேர்த்துக்கன்மலிந் திலங்கு திண்டோட்கலிங்கர்கோன் மெலிந்து மீண்டான்.2188. கன்மழைப் பொற்குன்றேந்திக் கணநிரை யன்றுகாத்துமன்னுயி ரின்று காக்கும்வாரண வாசி மன்னன்மின்னிழை சுடர வாங்கிவிட்டகோ லுற்று றாதாய்மன்னுயிர் நடுங்க நாணிமண்புக்கு மறைந்த தன்றே.2189. எரிகதிர்ப் பைம்பொற் சுண்ணமிலங்கமெய்ம் முழுது மப்பிப்புரிகழ லணிந்த நோன்றாட்போதன புரத்து வேந்தனரிதினிற் றிகிரி யேறித்திரிந்துகண் சுழன்று சோர்ந்துவிரிகதிர்க் கடவுள் போலவெறுநிலத் தொலிப்ப வீழ்ந்தான்.2190. மலையச்செஞ் சாந்து முந்நீர்வலம்புரி யீன்ற முத்துமிலைவைத்த கோதை நல்லாரிளமுலைப் பொறியு மார்ந்துசிலைவைத்த மார்பிற் றென்னன்றிருமணிப் பன்றி நோக்கித்தலைவைத்த தம்பு தானுந்தரணிமேற் பாதம் வைத்தான்.2191. விற்றிறல் விசய னென்பான்வெங்கணை செவிட்டி நோக்கியொற்றுபு திருத்திக் கைம்மேலுருட்டுபு நேமி சோந்தாங்குற்றதன் சிலையின் வாய்ப்பெய்துடுவமை பகழி வாங்கவிற்றுவின் முறிந்து போயிற்றிமைப்பினி னிலங்கித் திட்டான்.2192. குண்டல மிலங்க வாங்கிக்குனிசிலை யுறையி னீக்கிக்கொண்டவன் கொழும்பொற் றாருமாரமு மிளிர வேறிக்கண்டுகோ னிறைய வாங்கிக்காதுற மறித லோடும்விண்டுநா ணற்ற தாங்கேவிசயனும் வீக்க மற்றான்.2193. உளைவனப் பிருந்த மான்றேரொளிமுடி மன்ன ரெல்லாம்வலைவனப் பிருந்த தோளாள்வருமுலைப் போகம் வேண்டிவிளைதவப் பெருமை யோரார்விற்றிறன் மயங்கி யாருங்களைகலார் பொறியை யாங்கோராறுநாள் கழிந்த வன்றே.2194. பனைக்கை யானை மன்னர் பணியப் பைம்பொன் முடியிற்கனைக்குஞ் சுரும்பார் மாலை கமழ மதுவுந் தேனுநனைக்குங் கழலோன் சிறுவ னாம வெள்வேல் வலவனினைக்க லாகா வகையா னேரா ருயிர்மே லெழுந்தான்.2195. காரின் முழங்குங் களிறுங்கடலின் முழங்குந் தேரும்போரின் முழங்கும் புரவிக்கடலும் புகைவாட் கடலுஞ்சீரின் முழங்கு முரசுமலறுஞ் சிறுவெண் சங்குநீரின் முழங்க முழங்குநீல யானை யிவர்ந்தான்.2196. கல்லார் மணிப்பூண் மார்பிற்காம னிவனே யென்னவில்லார் கடலந் தானைவேந்தர் குழாத்துட் டோன்றப்புல்லான் கண்ணி னோக்கிப்புலிகாண் கலையிற் புலம்பியொல்லா னொல்லா னாகியுயிர்போ யிருந்தான் மாதோ.2197. புலியாப் புறுத்திக் கொண்டேன்போக்கி விட்ட பிழைப்பும்வலியார் திரடோண் மதனன்னவனைப் பிழைத்த பிழைப்புகலியு மென்னை நலியுமென்னக் களிற்றி னுச்சியிலையார் கடகத் தடக்கைபுடைத்து மெய்சோர்ந் திருந்தான்.2198. மைபூத் தலர்ந்த மழைக்கண்மாழை மானோ நோக்கிற்கொய்பூங் கோதை மடவார்கொற்றங் கொள்கென் றேத்தப்பெய்பூங் கழலான் வேழத்திழிந்து பிறைபோற் குலாயசெய்பூண் சிலைநா ணெறிந்தான்சேரார் நாளுக் கனவே.2199. கனிபடு மொழியி னாடன்காரிகை கவற்ற வந்துகுனிசிலை தோற்ற மன்னர்கொங்குகொப் புளிக்கு நீலப்பனிமலர்க் காடு போன்றார்படர்சிலை தொடாத வேந்தரினிதினின் மலர்ந்த வேரார்தாமரைக் காடு போன்றார்.2200. போர்த்தகல் விசும்பில் வந்துபொறித்திரி பன்றி மூன்றுநீர்த்தகப் புணர்ந்த போதினெடுந்தகை மூன்று மற்றுச்சூர்த்துடன் வீழ நோக்கிச்சுடுசரஞ் சிதற வல்லானோர்த்தொன்றே புணர்ப்ப நாடியொருபகல் காறு நின்றான்.2201. பொறியின்மே லேற றேற்றானாணினாற் போதல் செய்யானெறியின்வில் லூன்றி நிற்பநிழன்மணிப் பன்றி யற்றுமறியுமோ வென்று முன்னேமணிமுடி சிதறி வீழ்ந்தசெறிகழன் மன்னர் நக்குத்தீயத்தீ விளைத்துக் கொண்டார்.2202. சிரற்றலை மணிகள் வேய்ந்ததிருந்துபொற் றிகிரிச் செம்பொனுரற்றலை யுருவப் பன்றியிடம்வலந் திரிய நம்பன்விரற்றலைப் புட்டில் வீக்கிவெஞ்சிலை கணையோ டேந்திக்குரற்றலை வண்டு பொங்கக்குப்புற்று நேமி சேர்ந்தான்.2203. ஒள்ளழல் வைரப் பூணுமொளிர்மணிக் குழையு மின்னவொள்ளழற் கொள்ளி வட்டம்போற்குலாய்ச் சுழலப் பொன்ஞாணொள்ளழ னேமி நக்கமண்டல மாக நின்றானொள்ளழற் பருதி மேலோர்பருதிநின் றதனை யொத்தான்.2204. அருந்தவக் கிழமை போலவிறாதவில் லறாத நாண்வாய்த்திருந்தினார் சிந்தை போலுந்திண்சரஞ் சுருக்கி மாறாயிருந்தவன் பொறியும் பன்றியியற்றரும் பொறியு மற்றாங்கொருங்குட னுதிர வெய்தானூழித்தீ யுருமோ டொப்பான்.2205. இலங்கெயிற் றேன மேவுண்டிருநிலத் திடித்து வீழக்கலங்குதெண் டிரையுங் காருங்கடுவளி முழக்கு மொப்பஉலம்புபு முரசங் கொட்டியொய்யெனச் சேனை யார்ப்பக்குலம்பகர்ந் தறைந்து கோமான்கோவிந்தன் கூறி னானே.2206. வானிடை யொருவன் றோன்றிமழையென முழங்கிச் சொல்லுந்தேனுடை யலங்கல் வெள்வேற்சீவக னென்னுஞ் சிங்கங்கானுடை யலங்கன் மார்பிற்கட்டியங்கார னென்னும்வேன்மிடை சோலை வேழத்தின்னுயிர் விழுங்கு மென்றான்.2207. விஞ்சையர் வெம்படை கொண்டுவந் தாயெனவஞ்சுவ லோவறி யாயென தாற்றலைவெஞ்சம மாக்கிடின் வீக்கறுத் துன்னொடுவஞ்சனை வஞ்ச மறுத்திடு கென்றான்.2208. சூரியற் காண்டலுஞ் சூரிய காந்தமஃதாரழ லெங்ஙனங் கான்றிடு மங்ஙனம்பேரிசை யானிசை கேட்டலும் பெய்ம்முகிற்காரிடி போன்மத னன்கனன் றிட்டான்.2209. காற்படை யுங்களி றுங்கலி மாவொடுநூற்படு தேரு நொடிப்பினிற் பண்ணிநாற்படை யுந்தொகுத் தான்மக்க ணச்சிலைவேற்படை வீரரொர் நூற்றுவர் தொக்கார்.2210. விற்றிற லான்வெய்ய தானையும் வீங்குபுசெற்றெழுந் தான்படை யுஞ்சின மொய்ம்பொடுமற்றவர் மண்டிய வாளமர் ஞாட்பினுளுற்றவர்க் குற்றதெ லாமுரைக் குற்றேன்.2211. அத்தமா மணிவரை யனைய தோன்றலமத்தகத் தருவியின் மணந்த வோடையமுத்துடை மருப்பின முனைக்கண் போழ்வனபத்தியிற் பண்ணின பரும யானையே.2212. கோல்பொரு கொடுஞ்சிலை குருதி வெம்படைமேலவ ரடக்குபு வேழ மேறலின்மாலிரு விசும்பிடை மணந்த வொண்கொடிகால்பொரு கதலிகைக் கான மொத்தவே.2213. குடையுடை நிழலின் கோல மார்ந்தன்கிடுகுடைக் காப்பின கிளர்பொற் பீடிகையடிதொடைக் கமைந்தன வரவத் தோத்தொகைவடிவுடைத் துகின்முடி வலவர் பண்ணினார்.2214. கொய்யுளைப் புரவிகள் கொளீஇய திண்ணுகம்பெய்கயி றமைவரப் பிணித்து முள்ளுறீஇச்செய்கயி றாய்ந்தன சிலையு மல்லவுங்கையமைத் திளைஞருங் கருவி வீசினார்.2215. பறந்திய றருக்கின பரவை ஞாட்பினுட்கறங்கெனத் திரிவன கவரி நெற்றியபிறந்துழி யறிகெனப் பெரிய நூலவர்குறங்கெழுத் துடையன குதிரை யென்பவே.2216. கொன்னுனைக் குந்தமுஞ் சிலையுங் கூர்நுதிமின்னிலை வாளொடு மிலேச்ச ரேறலிற்பொன்னரிப் புட்டிலுந் தாரும் பொங்குபுமுன்னுருத் தார்த்தெழப் புரவி மொய்த்தவே.2217. மாலையுங் கண்ணியு மணந்த சென்னியராலுபு செறிகழ லார்க்குங் காலினர்பாலிகை யிடையறப் பிடித்த பாணியர்சாலிகை யுடம்பினர் தறுக ணாளரே.2218. போர்மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம்வார்மயிர்க் கிடுகொடு வள்ளித் தண்டையுநோமரப் பலகையு நிரைத்த தானையோர்போர்முகப் புலிக்கடல் புகுந்த தொத்ததே.2219. பார்நனை மதத்த பல்பேய் பருந்தொடு பரவச் செல்லும்போர்மதக் களிறு பொற்றேர் நான்கரைக் கச்ச மாகுமோமணிப் புரவி யேழா மிலக்கமேழ் தேவ கோடிகார்மலி கடலங் காலாள் கற்பகத் தாரி னாற்கே.2220. நிழன்மணிப் புரவித் திண்டேர்நிழறுழாய்க் குனிந்து குத்துமழறிகழ் கதத்த யானையைந்தரைக் கச்ச மாகுமெழின்மணிப் புரவி யேழாமிலக்கமேழ் தேவ கோடிகழன்மலிந் திலங்குங் காலாள்கட்டியங் காரற் கன்றே.2221. குலங்கெழு மகளிர்தங் கோல நீப்பவுமலங்குளைப் புரவியுங் களிறு மாளவுநிலமக ணெஞ்சுகை யெறிந்து நையவும்புலமகன் சீறினன் புகைந்த தெஃகமே.2222. குணில்பொரக் குளிறின முரசம் வெள்வளைபணைபரந் தார்த்தன பம்பை வெம்பினவிணையில வெழுந்ததாழ் பீலி யெங்கணுமுணையினாற் கடலக முழக்க மொத்தவே.2223. முடிமன ரெழுதரு பருதி மொய்களிறுடைதிரை மாக்கல மொளிறு வாட்படையடுதிற லெறிசுறா வாகக் காய்ந்தனகடலிரண் டெதிர்ந்ததோர் கால மொத்ததே.2224. அருங்கணை யடக்கிய வாவ நாழிகைபெரும்புறத் தலமரப் பிணிந்த கச்சினர்கருங்கழ லாடவர் கருவில் வாய்க்கொளீஇச்சொரிந்தனர் கணைமழை விசும்பு தூர்ந்ததே.2225. நிணம் பிறங் ககலமுந் தோளு நெற்றியுமணங்கருஞ் சரங்களி னழுத்தி யையெனமணங்கமழ் வருபுனன் மறலு மாந்தரிற்பிணங்கமர் மலைந்தனர் பெற்றி யின்னதே.2226. கழித்தனர் கனலவாள் புகைந்து கண்கடீவிழித்தன தீந்தன விமைகள் கூற்றெனத்தெழித்தனர் திறந்தன ரகல மின்னுயிரழித்தன ரயிலவ ரரவ மிக்கதே.2227. பொருங்களத் தாடவர் பொருவில் பைந்தலையரும்பெறற் கண்ணியோ டற்று வீழ்வனகருங்கனிப் பெண்ணையங் கானங் கால்பொரவிருங்கனி சொரிவன போன்ற வென்பவே.2228. பணைமுனிந் தாலுவ பைம்பொற் றாரினகணைவிசை தவிர்ப்பன கவரி நெற்றியதுணையமை யிளமைய தோற்ற மிக்கனவிணைமயிர்ப் புரவியோ டிவுளி யேற்றவே.2229. கூருளி முகம்பொரக் குழிசி மாண்டனவாரொளி யமைந்தன வாய்பொற் சூட்டினகாரொளி மின்னுமிழ் தகைய காலியற்றேரொடு தேர்தமுட் சிறந்து சேர்ந்தவே.2230. அஞ்சன மெழுதின கவள மார்ந்தனகுஞ்சரங் கூற்றொரு கொம்மை கொட்வேவஞ்சன வரைசிற குடைய போல்வனமஞ்சிவர் குன்றென மலைந்த வேழமே.2231. மாக்கடற் பெருங்கலங் காலின் மாறுபட்டாக்கிய கயிறரிந் தோடி யெங்கணும்போக்கறப் பொருவன போன்று தீப்படத்தாக்கின வரசுவாத் தம்மு ளென்பவே.2232. விடுசரம் விசும்பிடை மிடைந்து வெய்யவன்படுகதிர் மறைந்திருள் பரந்த தாயிடையடுகதி ரயிலொளி யரசர் மாமுடிவிடுகதிர் மணியொளி வெயிலிற் காய்ந்தவே.2233. பூண்குலாம் வனமுலைப் பூமி தேவிதான்காண்கலேன் கடியன கண்ணி னாலெனாச்சேண்குலாங் கம்பலஞ் செய்ய தொன்றினான்மாண்குலாங் குணத்தினான் மறைத்திட் டாளரோ.2234. கலைக்கோட்ட வகலல்குற் கணங்குழையார் கதிர்மணிப்பூண்முலைக்கோட்டா லுழப்பட்ட மொய்ம்மலர்த்தா ரகன்மார்பர்மலைக்கோட்ட வெழில்வேழந் தவநூறி மதயானைக்கொலைக்கோட்டா லுழப்பட்டுக் குருதியுட் குளித்தனரே.2235. மணமாலை மடந்தையர்தமெல்விரலாற் றொடுத்தணிந்தவிணர்மாலை யிருங்குஞ்சியீர்ங்குருதிப் புனலலைப்பநிணமாலைக் குடர்சூடிநெருப்பிமையா நெய்த்தோரிற்பிணமாலைப் பேய்மகட்குப்பெருவிருந் தயர்ந்தனரே.2236. தோலாப்போர் மறமன்னர்தொடித்தோள்க ளெடுத்தோச்சிமேலாண்மே னெருப்புமிழ்ந்துமின்னிலங்கு மயில்வாளாற்காலாசோ டறவெறிந்தகனைகழற்கா லலைகடலுணீலநீர்ச் சுறாவினம்போனெய்த்தோருட் பிறழ்ந்தனவே.2237. கருவியூ டுளங்கழிந்து கணைமொய்ப்பக் கதஞ்சிறந்துகுருவிசோ வரைபோன்ற குஞ்சரங் கொடியணிந்தவுருவத்தே ரிறமுருக்கி யுருணேமி சுமந்தெழுந்துபருதிசேர் வரைபோலப் பகட்டினம் பரந்தனவே.2238. மாலைவாய் நெடுங்குடைமேன்மதயானைக் கைதுணிந்துகோலநீள் கொழுங்குருதிகொளவீழ்ந்து கிடந்தனமேலைநீள் விசும்புறையும்வெண்மதியம் விசும்பிழுக்கிநீலமா சுணத்தோடுநிலத்திழிந்த தொத்தனவே.2239. அஞ்சன நிறநீக்கி யரத்தம்போர்த் தமருழக்கியிங்குலிக விறுவரைபோன் றினக்களி றிடைமிடைந்தகுஞ்சரங்கள் பாய்ந்திடலிற் குமிழிவிட் டுமிழ்குருதியிங்குலிக வருவிபோன் றெவ்வாயுந் தோன்றினவே.2240. குஞ்சரந் தலையடுத்துக் கூந்தன்மாக் காலணையாச்செஞ்சோற்றுக் கடனீங்கிச் சினவுவாள் பிடித்துடுத்தபஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்கக் கிடந்தாரையஞ்சிப்போந் தினநரியோ டோரிநின் றலறுமே.2241. காதலார்க் கமிர்தீந்த கடற் பவழக் கடிகைவாயேதிலாப் புள்ளுண்ணக் கொடேமென்று வாய்மடித்துக்காதணிந்த பொற்றோடுங் குண்டலமு நகநகாவீததைந்த வரைமார்பர் விஞ்சையர்போற் கிடந்தனரே.2242. குடர்வாங்கு குறுநரிகள்கொழுநிணப் புலாற்சேற்றுட்டொடர்வாங்கு கதநாய்போற்றோன்றின தொடித்திண்டோள்படர்தீரக் கொண்டெழுந்தபறவைகள் படநாகமுடனேகொண் டெழுகின்றவுவணப்பு ளொத்தனவே.2243. வரையோடு முருமிடிப்பவளையெயிற்றுக் கொழுங்குருதிநிரையுளை யரிநன்மாநிலமிசைப் புரள்வனபோற்புரையறுபொன் மணியோடைப்பொடிப்பொங்கப் பொருதழிந்தரைசோடு மரசுவாவடுகளத்து ளாழ்ந்தனவே.2244. தடம்பெருங் குவளைக்கட் டாழ்குழலார் சாந்தணிந்துவடந்திளைப்பப் புல்லிய வரைமார்பம் வாள்புல்லநடந்தொழுகு குருதியு ணகாக்கிடந்த வெரிமணிப்பூணிடம்படு செவ்வானத் திளம்பிறைபோற் றோன்றினவே.2245. காளமா கிருளைப் போழ்ந்துகதிர்சொரி கடவுட் டிங்கள்கோளரா விழுங்க முந்நீர்க்கொழுந்திரைக் குளித்த தேபோனீளம ருழக்கி யானைநெற்றிமேற் றத்தி வெய்யவாளின்வாய் மதனன் பட்டான்விசயன்போர் விசயம் பெற்றான்.2246. மன்மத னென்னுங் காளைமணியொலிப் புரவித் தேர்மேல்வின்மழை சொரிந்து கூற்றிற்றெழித்தனன் றலைப்பெய் தார்ப்பக்கொன்மலி மார்பன் பொற்றேர்கொடுஞ்சிலை யறுப்பச் சீறியபொன்வரைப் புலியிற் பாய்ந்துபூமிமேற் றோன்றி னானே.2247. நெற்றிமேற் கோல்கண் மூன்றுநெருப்புமிழ்ந் தழுந்த வெய்யச்சுற்றுபு மாலை போலத்தோன்றறன் னுதலிற் சூடிப்பொற்றதோர் பவழந் தன்மேற்புனைமணி யழுத்தி யாங்குச்செற்றெயி றழுந்தச் செவ்வாய்கௌவிவா ளுரீஇ னானே.2248. தோளினா லெஃக மேந்தித்தும்பிமே லிவரக் கையானீளமாப் புடைப்பப் பொங்கிநிலத்தவன் கவிழ்ந்து வீழக்கீளிரண் டாகக் குத்தியெடுத்திடக் கிளர்பொன் மார்பன்வாளினாற் றிருகி வீசிமருப்பின்மேற் றுஞ்சி னானே.2249. நனைகலந் திழியும் பைந்தார்நான்மறை யாளன் பைம்பொற்புனைகலக் குப்பை யொப்பான்புத்திமா சேனன் பொங்கிவனைகலத் திகிரித் தோமேன்மன்னரைக் குடுமி கொண்டான்கனையெரி யழலம் பெய்தகண்ணுதன் மூர்த்தி யொத்தான்.2250. செண்பகப் பூங்குன் றொப்பான்றேவமா தத்தன் வெய்தாவிண்புக வுயிரைப் பெய்வான்வீழ்தரு கடாத்த வேழமண்பக விடிக்குஞ் சிங்கமெனக்கடாய் மகதர் கோமான்றெண்கடற் றானை யோடநாணிவேல் செறித்திட் டானே.2251. சின்னப்பூ வணிந்த குஞ்சிச்சீதத்தன் சினவு பொன்வாண்மன்னருட் கலிங்கர் கோமான்மத்தகத் திறுப்ப மன்னன்பொன்னவிர் குழையும் பூணுமாரமுஞ் சுடர வீழ்வான்மின்னவிர் பருதி முந்நீர்க்கோளொடும் வீழ்வ தொத்தான்.2252. கொடுஞ்சிலை யுழவன மான்றேர்க்கோவிந்த னென்னுஞ் சிங்கமடங்கருஞ் சீற்றத் துப்பின்மாரட்ட னென்னும் பொற்குன்றிடத்துபொற் றூளி பொங்கக்களிற்றொடு மிறங்கி வீழவடர்ந்தெரி பொன்செ யம்பினழன்றிடித் திட்ட தன்றே.2253. கோங்குபூத் துதிர்ந்த குன்றிற்பொன்னணி புளகம் வேய்ந்தபாங்கமை பரும யானைப்பல்லவ தேச மன்னன்றேங்கமழ் தெரியற் றீம்பூந்தாரவ னூர்ந்த வேழங்காம்பிலிக் கிறைவ னூர்ந்தகளிற்றொடு மலைந்த தன்றே.2254. கொந்தழல் பிறப்பத் தாக்கிக்கோடுகண் மிடைந்த தீயால்வெந்தன விலையி லாதசாமரை வீர மன்னனந்தரம் புதைய வில்வாயருஞ்சரம் பெய்த மாரிகுந்தத்தால் விலக்கி வெய்யகூற்றென முழங்கி னானே.2255. மற்றவ னுலோக பாலன்வயங்குபொற் பட்ட மார்ந்தநெற்றிமே லெய்த கோலைப்பறித்திட வுமிழ்ந்த நெய்த்தோருற்றவன் களிற்றிற் பாயத்தோன்றுவா னுதயத் துச்சியொற்றைமாக் கதிரை நீட்டியொண்சுட ரிகுந்த தொத்தான்.2256. கொடுமரங் குழைய வாங்கிக்கொற்றவ னெய்த கோல்கணெடுமொழி மகளிர் கோலநிழன்மணி முலைக ணோபட்டுடனுழ வுவந்த மார்பமூழ்கலிற் சிங்கம் போலக்கடன்மருள் சேனை சிந்தக்காம்பிலி மன்னன் வீழ்ந்தான்.2257. பொன்னிறக் கோங்கம் பொற்பூங்குன்றெனப் பொலிந்த மேனிநன்னிற மாலின் மேலாநலங்கொடார் நபுல னென்பான்மின்னிற வெஃக மேந்திவீங்குநீர் மகதை யார்கோன்கொன்னிறக் களிற்றி னெற்றிக்கூந்தன்மாப் பாய்வித் தானே.2258. ஏந்தறன் கண்கள் வெய்யவிமைத்திட வெறித லோம்பிநாந்தக வுழவ னாணிநக்குநீ யஞ்சல் கண்டாய்காய்ந்திலே னென்று வல்லேகலினமாக் குன்றிற் பொங்கிப்பாய்ந்ததோர் புலியின் மற்றோர்பகட்டின்மேற் பாய்வித் தானே.2259. கைப்படை யொன்று மின்றிக்கைகொட்டிக் குமர னார்ப்பமெய்ப்படை வீழ்ந்த நாணிவேழமு மெறிதல் செல்லான்மைப்பட நெடுங்கண் மாலைமகளிர்தம் வனப்பிற சூழ்ந்துகைப்படு பொருளி லாதான்காமம்போற் காளை மீண்டான்.2260. மண்காவலை மகிழாதிவ ணுடனேபுக ழொழியவிண்காவலை மகிழ்வீர்நனி யுளிரோவென விபுலன்வண்காரிருண் மின்னேயுமிழ் நெய்வாயதொ ரயில்வாள்கண்காவல கழுகோம்புவ துயராநனி வினவும்.2261. வீறின்மையின் விலங்காமென மதவேழமு மெறியானேறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் றெறியான்மாறன்மையின் மறம்வாடுமென் றிளையாரையு மெறியானாறன்மையின் முதியாரையு மெறியானயி லுழவன்.2262. ஒன்றாயினும் பலவாயினுமோரோச்சினு ளெறியவென்றாயின மதவேழமுமுளவோவென வினவிப்பொன்றாழ்வரைப் புலிப்போத்தெனப்புனை தார்மிஞி றார்ப்பச்சென்றானிகல் களிறாயிரமிரியச்சின வேலோன்.2263. புடைதாழ்குழை பொருவில்லுயர்பொன்னோலையொ டெரியவுடைநாணொடு கடிவட்டினொடொளிர்வாளினொ டொருவனடையாநிக ரெறிநீயெனவதுவோவென நக்கான்கிடையாயின னிவனேயெனக்கிளராணழ குடையான்.2264. இன்னீரின திரைமேலிரண்டிளவெஞ்சுட ரிகலிமின்னோடவை சுழன்றாயிடைவிளையாடுகின் றனபோற்பொன்னாணினர் பொருவில்லியர்புனைகேடகந் திரியாக்கொன்வாளினர் கொழுந்தாரினர்கொடிமார்பினர் திரிந்தார்.2265. விருந்தாயினை யெறிநீயெனவிரைமார்பகங் கொடுத்தாற்கரும்பூணற வெறிந்தாங்கவனினதூழினி யெனவேயெரிந்தாரயி லிடைபோழ்ந்தமையுணராதவ னின்றான்சொரிந்தார்மல ரரமங்கையர்தொழுதார்விசும் படைந்தான்.2266. நித்திலக் குப்பை போலநிழலுமிழ்ந் திலங்கு மேனிப்பத்திப்பூ ணணிந்த மார்பிற்பதுமுகன் பைம்பொற் சூழிமொய்த்தெறி யோடை நெற்றிமும்மதக் களிற்றின் மேலான்கைத்தலத் தெஃக மேந்திக்காமுகற் கண்டு காய்ந்தான்.2267. மாற்றவன் சேனை தாக்கித்தளர்ந்தபின் வன்கண் மள்ளராற்றலொ டாண்மை தோன்றவாருயிர் வழங்கி வீழ்ந்தார்காற்றினாற் புடைக்கப் பட்டுக்கடலுடைந் தோடக் காமரேற்றிளஞ் சுறாக்க ளெங்குங்கிடந்தவை போல வொத்தார்.2268. தூசுலாம் பரவை யல்குற்றுணைமுலை மகளி ராடுமூசல்போற் சேனை யோடப்பதுமுகன் களிற்றை யுந்திமாசில்சீர் மழையி னெற்றிமாமதி நுழைவ தேபோற்காய்சினக் களிற்றி னெற்றியாழிகொண் டழுத்தி னானே.2269. பெருவலி யதனை நோனான்பிண்டிபா லத்தை யேந்தியருவரை நெற்றிப் பாய்ந்தவாய்மயிற் றோகை போலச்சொரிமதக் களிற்றின் கும்பத்தழுத்தலிற் றோன்றல் சீறிக்கருவலித் தடக்கை வாளிற்காளையை வெளவி னானே.2270. தீமுகத் துமிழும் வேற்கட்சில்லரிச் சிலம்பி னார்தங்காமுகன் களத்து வீழக்கைவிர னுதியிற் சுட்டிப்பூமுக மாலை மார்பன்பொன்னணி கவச மின்னக்கோமுகன் கொலைவல் யானைகூற்றெனக் கடாயி னானே.2271. சாரிகை திரியும் யானையுழக்கலிற் றரணி தன்மேலார்கலிக் குருதி வெள்ளமருந்துகள் கழுமி யெங்கும்வீரியக் காற்றிற் பொங்கிவிசும்புபோர்த் தெழுதப் பட்டபோர்நிலைக் களத்தை யொப்பக்குருதிவான் போர்த்த தன்றே.2272. சென்றது தடக்கை தூணிசேந்தகண் புருவங் கோலிநின்றவிற் குனிந்த தம்புநிமிர்ந்தன நீங்கிற் றாவிவென்றிகொள் சரங்கண் மூழ்கிமெய்ம்மறைத் திட்டு மின்றோய்குன்றின்மேற் பவழம் போலக்கோமுகன் றோன்றி னானே.2273. பனிவரை முளைத்த கோலப்பருப்புடைப் பவழம் போலக்குனிமருப் புதிரந் தோய்ந்தகுஞ்சரங் கொள்ள வுந்திக்கனிபடு கிளவி யார்தங்கதிர்முலை பொருது சேந்ததுனிவரை மார்பன் சீறிச்சுடுசரஞ் சிதறி னானே.2274. பன்னலம் பஞ்சிக் குன்றம்படரெரி முகந்த தொப்பத்தன்னிரு கையி னாலுந்தடக்கைமால் யானை யாலுமின்னுயிர் பருகிச் சேனையெடுத்துக்கொண் டிரிய வோட்டிக்கொன்முரண் டோன்ற வெம்பிக்கொலைக்களிற் றுழவ னார்த்தான்.2275. தருக்கொடு குமர னார்ப்பத்தன்சிலை வளைய வாங்கியொருக்கவன் கையும் வாயுமுளங்கிழித் துடுவந் தோன்றச்சுருக்குக்கொண் டிட்ட வண்ணந்தோன்றலெய் திடுத லோடுமருப்பிறக் களிறு குத்திவயிரந்தான் கழிந்த தன்றே.2276. நித்தில மணிவண் டென்னு நெடுமதக் களிறு பாயமுத்துடை மருப்பு வல்லே யுடைந்துமுத் தொழுகு குன்றின்மத்தக யானை வீழ்ந்து வயிரங்கொண் டொழிந்த தாங்குப்பத்திரக் கடிப்பு மின்னப் பகடு போர்த்தான்.2277. பத்திரக் கடிப்பு மின்னப்பங்கியை வம்பிற் கட்டிக்கொத்தலர்த் தும்பை சூடிக்கோவிந்தன் வாழ்க வென்னாக்கைத்தலத் தெஃக மேந்திக்காளைபோய் வேறு நின்றான்மத்தக யானை மன்னர்வயிறெரி தவழ்ந்த தன்றே.2278. மேகலைப் பரவை யல்குல்வெள்வளை மகளிர் செஞ்சாந்தாகத்தைக் கவர்ந்து கொண்டவணிமுலைத் தடத்து வைகிப்பாகத்தைப் படாத நெஞ்சிற்பல்லவ தேய மன்னன்சேவகன் சிங்க நாதன்செருக்களங் குறுகி னானே.2279. புனைகதிர் மருப்புத் தாடி மோதிரஞ் செறித்துப் பொன்செய்கனைகதிர் வாளை யேந்திக் கால்கழ லணிந்து நம்மையினையன பட்ட ஞான்றா லிறைவர்க ணினைப்ப தென்றேமுனையழன் முளிபுற் கான மேய்ந்தென நீந்தி னானே.2280. தாரணி பரவை மார்பிற் குங்கும மெழுதித் தாழ்ந்தவாரமும் பூணு மின்ன வருவிலைப் பட்டி னங்களோபடக் கிடந்த பொன்ஞா ணிருள்கெட விழிப்ப வெய்யபூரண சேனன் வண்கைப் பொருசிலை யேந்தி னானே.2281. ஊனமர் குறடு போல விரும்புண்டு மிகுத்த மார்பிற்றேனமர் மாலை தாழச் சிலைகுலாய்க் குனிந்த தாங்கண்மானமர் நோக்கி னாரு மைந்தருங் குழீஇய போருட்கானமர் காம னெய்த கணையெனச் சிதறி னானே.2282. வண்டலை மாலை தாழ மதுவுண்டு களித்து வண்கைப்புண்டலை வேலை யேந்திப் போர்க்களங் குறுகி வாழ்த்திக்கண்படு காறு மெந்தை கட்டியங் கார னென்றேயுண்டொலை யார்க வேலென் றுறுவலி தாக்கி னானே.2283. கூற்றென வேழம் வீழாக் கொடிநெடுந் தோக ணூறாவேற்றவர் தம்மைச் சீறா வேந்திர நூழில் செய்யாவாற்றலங் குமரன் செல்வா னலைகடற் றிரையி னெற்றியேற்றுமீ னிரியப் பாய்ந்த வெறிசுறா வேறு போன்றான்.2284. மாலைக்க ணாம்பல் போல மகளிர்தங் குழாத்திற் பட்டார்கோலவாட் போருட் பட்டாற் குறுமுயற் கூடு கண்டுசாலத்தாம் பனிக்கும் பொய்கைத் தாமரை நீர ராயின்ஞாலத்தா ராண்மை யென்னா மெனநகா வருகின் றானே.2285. முடிச்சடை முனிவ னன்று வேள்வியிற் கொண்ட வேற்கண்மடத்தகை மகளிர் கோல வருமுலை யுழக்கச் சேந்துகொடிப்பல வணிந்த மார்பிற் கோவிந்தன் வாழ்க வென்றுநடத்துவா னவனை நோக்கி நகாச்சிலை பாரித் தானே.2286. போர்த்தநெய்த் தோர னாகிப் புலாற்பருந் தார்ப்பச் செல்வான்சீர்த்தகை யவனைக் கண்டென் சினவுவே லின்னு மார்ந்தின்றூர்த்துயி ருன்னை யுண்ணக் குறைவயி றாரு மென்றாங்கார்த்தவாய் நிறைய வெய்தா னம்புபெய் தூணி யொத்தான்.2287. மொய்ப்படு சரங்கண் மூழ்க முனையெயிற் றாளி போலவப்பணைக் கிடந்த மைந்த னருமணித் திருவில் வீசுஞ்செப்பிள முலையி னார்கண் சென்றுலாய்ப் பிறழச் சிந்திக்கைப்பட வெடுத்திட் டாடும் பொலங்கழற் காயு மொத்தான்.2288. புனைகதிர்ப் பொன்செய் நாணிற்குஞ்சியைக் கட்டி நெய்த்தோர்நனைகதி ரெஃக மேந்திநந்தன்வாழ் கென்ன நின்றவினையொளிர் காளை வேலைக்கடக்கலார் வேந்தர் நின்றார்கனைகடல் வேலை யெல்லைகடக்கலா வண்ண நின்றார்.2289. நின்றவப் படையு ளானே யொருமக னீலக் குஞ்சிமன்றல மாலை நெற்றி மழகளி றன்றி வீழான்வென்றியங் கொளிறும் வெள்வேன் மின்னென வெகுண்டு விட்டான்சென்றவேல் விருந்து செங்கண் மறவனக் கெதிர்கொண் டானே.2290. மான்வயி றார்ந்து நோக்கும்வெருவுறு மருளி னோக்கிற்றேன்வயி றார்ந்த கோதைத்தீஞ்சொலார் கண்கள் போலுமூன்வயி றார்ந்த வெள்வேலொய்யெனப் பறித்து நக்கான்கான்வயி றார்ந்து தேக்கிக்களிவண்டு கனைக்குந் தாரான்.2291. விட்டழல் சிந்தி வெள்வேல் விசும்பின்வீழ் மின்னி னொய்தாக்கட்டழ னெடுங்கண் யாது மிமைத்திலன் மகளி ரோச்சுமட்டவிழ் மாலை போல மகிழ்ந்துபூண் மார்பத் தேற்றுக்கட்டழ லெஃகஞ் செல்லக் கானெறி யாயி னானே.2292. கவிமதங் கடந்து காமர்வனப்புவீற் றிருந்த கண்ணார்குவிமுலை நெற்றித் தீந்தேன்கொப்புளித் திட்ட பைந்தார்ச்செவிமதக் கடலங் கேள்விச்சீவகன் கழல்கள் வாழ்த்திச்சவிமதுத் தாம மார்பிற்சலநிதி தாக்கி னானே.2293. குஞ்சரங் குனிய நூறித் தடாயின குருதி வாடன்னெஞ்சக நுழைந்த வேலைப்பறித்துவான் புண்ணு ணீட்டிவெஞ்சம நோக்கி நின்று மிறைக்கொளி திருத்து வாற்கண்டஞ்சிமற் றரசர் யானைக் குழாத்தொடு மிரிந்திட் டாரே.2294. தோட்டுவண் டொலியன் மாலைத்துடியிடை மகளி ராய்ந்தமோட்டுவெண் முத்த மின்னுமுகிழ்முலை யுழுது சாந்தம்கோட்டுமண் கொண்ட மார்பங்கோதைவாள் குளித்து மூழ்கிக்கோட்டுமண் கொள்ள நின்றான்குருசின்மண் கொள்ள நின்றான்.2295. எரிமணிக் குப்பை போல விருளற விளங்கு மேனித்திருமணிச் செம்பொன் மார்பிற் சீவகன் சிலைகை யேந்தியருமணி யரச ராவி யழலம்பிற் கொள்ளை சாற்றிவிரிமணி விளங்கு மான்றோ விண்டொழ வேறி னானே.2296. கருவளி முழக்குங் காருங்கனைகட லொலியுங் கூடியருவலிச் சிங்க வார்ப்புமாங்குடன் கூடிற் றென்னச்செருவிளை கழனி மள்ளரார்ப்போடு சிவணிச் செம்பொற்புரிவளை முரச மார்ப்பப்போர்த்தொழி றொடங்கி னானே.2297. அரசர்த முடியும் பூணுமாரமும் வரன்றி யார்க்குமுரசமுங் குடையுந் தாரும்பிச்சமுஞ் சுமந்து மாவும்விரைபரித் தேரு மீர்த்துவேழங்கொண் டொழுகி வெள்ளக்குரைபுனற் குருதி செல்லக்குமரன்விற் குனிந்த தன்றே.2298. கேழ்கிள ரெரிகட் பேழ்வாய்க் கிளர்பெரும் பாம்பி னோடுஞ்சூழ்கதிர்க் குழவித் திங்க டுறுவரை வீழ்வ தேபோற்றாழிருந் தடக்கை யோடுந் தடமருப் பிரண்டு மற்றுவீழ்தரப் பரந்த வப்பு நிழலிற்போர் மயங்கி னாரே.2299. ஆடவ ராண்மை தோற்றுமணிகிளர் பவழத் திண்கைநீடெரி நிலைக்கண் ணாடிப்போர்க்களத் துடைந்த மைந்தர்காடெரி கவரக் கலலென்கவரிமா விரிந்த வண்ணமோடக்கண் டுருவப் பைந்தாரரிச்சந்த னுரைக்கின் றானே.2300. மஞ்சிவர் மின்ன னார்தம் வாலரிச் சிலம்பு சூழ்ந்துபஞ்சிகொண் டெழுதப் பட்ட சீறடிப் பாய்த லுண்டகுஞ்சியங் குமரர் தங்கண் மறம்பிறர் கவர்ந்து கொள்ளவஞ்சியிட் டோடிப் போகி னாண்மையார் கண்ண தம்மா.2301. உழையின முச்சிக் கோடு கலங்குத லுற்ற போதேவிழைவற விதிர்த்து வீசி விட்டெறிந் திடுவ தொப்பக்கழலவ ருள்ள மஞ்சிக் கலங்குமே லதனை வல்லேமழைமினி னீக்கி யிட்டு வன்கண்ண ராப வன்றே.2302. தற்புறந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தாற்கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர்த் தோய்வர்பொற்றசொன் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கன்மேனிற்பர்தம் வீரந் தோன்ற நெடும்புகழ் பரப்பி யென்றான்.2303. பச்சிரும் பெஃகிட் டாங்குப் படையைக்கூர்ப் பிடுத லோடுங்கச்சையுங் கழலும் வீக்கிக் காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்டச்சுற முழங்கி யாரா வண்ணலங் குமரன் கையுணச்செயிற் றம்பு தின்ன நாளிரை யாக லுற்றார்.2304. வடதிசை யெழுந்த மேகம் வலனுராய் மின்னுச் சூடிக்குடதிசைச் சோந்து மாரி குளிறுபு சொரிவ தேபோற்படர்கதிர்ப் பைம்பொற் றிண்டோ பாங்குற விமைப்பி னூர்ந்தானடர்சிலை யப்பு மாரி தாரைநின் றிட்ட தன்றே.2305. அற்றுவீழ் தலைகள் யானை யுடலின்மே லழுந்தி நின்றபொற்றதிண் சரத்திற் கோத்த பொருசரந் தாள்க ளாகத்தெற்றிமேற் பூத்த செந்தா மரைமலர் போன்ற செங்கண்மற்றத்தா துரிஞ்சி யுண்ணும் வண்டின் மொத்த வன்றே.2306. திங்க ளோடுடன் குன்றெலாந் துளங்கி மாநிலஞ் சோவபோற்சங்க மத்தகத் தலமரத் தரணி மேற்களி றழியவும்பொங்கு மாநிரை புரளவும் பொலங்கொ டோபல முறியவுஞ்சிங்கம் போற்றொழித் தார்த்தவன் சிறுவர் தோமிசைத் தோன்றினார்.2307. சந்த னஞ்சொரி தண்கதிர்த் திங்க ளந்தொகை தாம்பலகுங்கு மக்கதிர்க் குழவியஞ் செல்வ னோடுடன் பொருவபோன்மங்குன் மின்னென வள்ளறேர் மைந்தர் தேரொடு மயங்கலின்வெங்கண் வில்லுமிழ் வெஞ்சர மிடைந்து வெங்கதிர் மறைந்ததே.2308. குருதி வாளொளி யரவினாற்கொள்ளப் பட்டவெண் டிங்கள்போற்றிருவ நீர்த்திகழ் வலம்புரிவாய்வைத் தாங்கவன் றெழித்தலும்பொருவில் கீழ்வளி முழக்கினாற்பூமி மேற்சன நடுங்கிற்றேயரவ வெஞ்சிலை வளைந்ததேயண்ணல் கண்ணழ லுமிழ்ந்ததே.2309. கங்கை மாக்கடற் பாய்வதேபோன்று காளைதன் கார்முகமைந்த ரார்த்தவர் வாயெலாநிறைய வெஞ்சரங் கான்றபினெஞ்சம போழ்ந்தழ லம்புணநீங்கி னாருயிர் நீண்முழைச்சிங்க வேறுகள் கிடந்தபோற்சிறுவர் தோமிசைத் இஞ்சினார்.2310. நிவந்த வெண்குடை வீழவும் வேந்தர் நீள்விசும் பேறவுமுவந்து பேய்க்கண மாடவு மோரி கொள்ளைகொண் டுண்ணவுங்கவந்த மெங்கணு மாடவுங் களிறு மாவொடு கவிழவுஞ்சிவந்த சீவக சாமிகண் புருவ மும்முரி முரிந்தவே.2311. பொய்கை போர்க்களம் புறவிதழ்புலவு வாட்படை புல்லிதழைய கொல்களி றகவிதழரச ரல்லிதன் மக்களாமையில் கொட்டையம் மன்னனாமலர்ந்த தாமரை வரிசையாற்பைய வுண்டபின் கொட்டைமேற்பவித்திரத் தும்பி பறந்ததே.2312. கலைமுத்தங் கொள்ளு மல்குற் கார்மழை மின்ன னார்தமுலைமுத்தங் கொள்ளச் சாந்த மழிந்துதார் முருகு விம்முமலைமுத்தங் கொள்ளு மார்பின் மன்னனுங் கண்டு காய்ந்தான்சிலைமுத்தங் கொள்ளுந் திண்டோட் செம்மலுந் தீயிற் சேந்தான்.2313. தன்மதந் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்பின்மதஞ் செறித்திட்டு டஞ்சிப் பிடிமறந் திரிந்து போகும்வென்மதக் களிற்று வெய்ய வசனிவே கத்தின் மேலான்மின்னுமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பி னானே.2314. நல்வினை யுடைய நீரார் நஞ்சுணி னமுத மாகுமில்லையே லமுது நஞ்சா மின்னதால் வினையி னாக்கங்கொல்வல்யா னிவனை யென்று மிவன்கொல்லு மென்னை யென்றுமல்லன நினைத்தல் செல்லா ரறிவினாற் பெரிய நீரார்.2315. அகப்படு பொறியி னாரை யாக்குவா ரியாவ ரம்மாமிகப்படு பொறியி னாரை வெறியராச் செய்ய லாமோநகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட்டிடுத லுண்டேபகைக்கதிர்ப் பருதி சந்து மாலியும் பயத்த லுண்டே.2316. புரிமுத்த மாலைப் பொற்கோல்விளக்கினுட் பெய்த நெய்யுந்திரியுஞ்சென் றற்ற போழ்தேதிருச்சுடர் தேம்பி னல்லாலெரிமொய்த்துப் பெருக லுண்டோவிருவினை சென்று தேய்ந்தாற்பரிவுற்றுக் கெடாமற் செல்வம்பற்றியா ரதனை வைப்பார்.2317. நல்லொளிப் பவளச் செவ்வாய் நன்மணி யெயிறு கோலிவில்லிட நக்கு வீர னஞ்சினா யென்ன வேந்தன்வெல்வது விதியி னாகும் வேல்வரி னிமைப்பே னாயிற்சொல்லிநீ நகவும் பெற்றாய் தோன்றன்மற் றென்னை யென்றான்.2318. பஞ்சிமெல் லடியி னார்தம்பாடகந் திருத்திச் சேந்துநெஞ்சுநொந் தழுத கண்ணீர்துடைத்தலி னிறைந்த கோலவஞ்சனக் கலுழி யஞ்சேறாடிய கடக வண்கைவெஞ்சிலை கொண்டு வெய்யவுருமென முழங்கிச் சொன்னான்.2319. இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்ற நெஞ்சிற்புல்லாள னாக மறந்தோற்பி னெனப்பு கைந்துவில்வா ளழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கிக்கொல்யானை யுந்திக் கடைமேலுமொர் கோறொ டுத்தான்.2320. தொடுத்தாங்க வம்பு தொடைவாங்கி விடாத முன்னமடுத்தாங்க வம்புஞ் சிலையும்மத னாணு மற்றுக்கடுத்தாங்கு வீழக் கதிர்வான்பிறை யம்பி னெய்தான்வடித்தாரை வெள்வேல் வயிரம்மணிப் பூணி னானே.2321. அம்புஞ் சிலையு மறுத்தானென் றழன்று பொன்வாள்வெம்பப் பிடித்து வெகுண்டாங்கவன் தேரின் மேலேபைம்பொன் முடியான் படப்பாய்ந்திடு கென்று பாய்வான்செம்பொன் னுலகி னிழிகின்றவொர் தேவ னொத்தான்.2322. மொய்வார் குழலார் முலைப்போர்க்கள மாய மார்பிற்செய்யோன் செழும்பொற் சரஞ்சென்றன சென்ற தாவிவெய்தா விழியா வெகுவத்துவர் வாய்ம டியாமையார் விசும்பின் மதிவீழ்வது போல வீழ்ந்தான்.2323. கட்டியங் கார னென்னுங்கலியர சழிந்த தாங்குப்பட்டவிப் பகைமை நீங்கிப்படைத்தொழி லொழிக வென்னாக்கொட்டினர் முரச மள்ளரார்த்தனர் குருதிக் கண்ணீர்விட்டமு தவன்க ணார்வமண்மக ணீக்கி னாளே.2324. ஒல்லைநீ ருலக மஞ்சவொளியுமிழ் பருதி தன்னைக்கல்லெனக் கடலி னெற்றிக்கவுட்படுத் திட்டு நாகம்பல்பகல் கழிந்த பின்றைப்பன்மணி நாகந் தன்னைவல்லைவாய் போழ்ந்து போந்தொர்மழகதிர் நின்ற தொத்தான்.2325. கோட்டுமீன் குழாத்தின் மள்ளரீண்டினர் மன்னர் சூழ்ந்தார்மோட்டுமீன் சூழாத்தி னெங்குந்தீவிகை மொய்த்த முத்தமாட்டுநீர்க் கடலி னார்த்ததணிநகர் வென்றி மாலைகேட்டுநீர் நிறைந்து கேடில்விசயைகண் குளிர்ந்த வன்றே.2326. அணிமுடி யரசர் மாலையழனுதி வாள்க ளென்னுமணிபுனை குடத்தி னெய்த்தோர்மண்ணுநீர் மருள வாட்டிப்பணைமுலைப் பைம்பொன் மாலைப்பாசிழைப் பூமி தேவியிணைமுலை யேக மாகநுகரிய வெய்தி னானே.